Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147  (Read 262 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 147
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline SwarNa

காதல்
நினைக்கையில் இதழோரம்
 அரும்பிட்ட புன்னகை
காதலை காதலிக்க
வைத்தவனும் என்னவனே

பயணங்களில் தோள் சாய்ந்து செல்ல ,
அடவியின் அடர்ந்த மரங்களினூடே
கை கோர்த்து நடந்திட ,
அமைதி ததும்பும் இடங்கள் 
அனைத்துமே நம் சொர்க்கபுரியாகிட
காணும் இடமெல்லாம்
நம்மைக் காண்கிறேன்

அழகான காதலும் இன்பமாய்
உன் அரவணைப்பில்
தொடர்ந்திட ஆசை

கரடுமுரடான வாழ்க்கைப்பாதையும்
சுலபமாய் கடந்திட
அன்புமழையில் நாம் நனைந்திட ஆசை

நம் குறைகள் நமை தாக்காமல்
          நம் அன்பே
       குடையாய் மாறி
காக்கட்டும் நம் காதலை   <3 <3 <3
« Last Edit: May 14, 2017, 12:19:19 PM by SwarNa »

Offline thamilan

இதயங்கள் இன்ப மழையில்
நனைந்திடும் போது குடை எததற்கு
மனமது காதலில்
மயங்கிக் கிடக்கும் போது
மழையும் தெரியாது வெயிலும் புரியாது

 காதல் நம் வசமில்லை
நாம் காதல் வசப்படுகிறோம்
காதல் வா என்றால் வருவதில்லை
போ   என்றால் போவதில்லை

காதல் ஒரு நெருப்பு
பச்சையாக இருக்கும் மனிதன்
காதல் நெருப்பில்
பதப்படுத்தப்படுகிறான்
காதல் நெருப்பில்
அழுக்கான மனிதன்
புடம் போடப்பட்டு தூய்மையாகிறான் 

இரு இதயங்களை இணைத்திடும்
காந்தக் கயிறு காதல்
காதல் கந்தக நதியல்ல
அது ஜீவநதி
இந்த நதிக்கரை நாகரிகத்தின்
அகரம் ஆதாம்
அவன் கைப்பற்றிய
சிகரம் ஏவாள்

இரு உயிர்களும்
ஒரு கனியை பிடுங்கித் தின்ன
வெட்கம் பிடுங்கி தின்றது
இலைகள் ஆடைகளாயின
இது காதலுக்கு பைபிள் போட்ட
பிள்ளையார் சுழி…….

« Last Edit: May 14, 2017, 07:15:29 PM by thamilan »

Offline இணையத்தமிழன்

இருகூட்டில் வாழ்ந்திடும் இருஇதயமும்
பல்லிளிக்கும் பங்குனி வெயிலிலே 
ஒருசேர ஒரு குடைக்குள் மறைந்துகிடந்தது
உலகின் இரண்டாம் நீண்ட கடற்கரையாம்
மெரினாவில்

நேற்று பெய்த மழையில் முளைத்த
காளான் போல 
அடிக்கு ஒரு குடையாய்
காதலர்கள் என்று சொல்லி லயித்திருக்க
சுற்றமும் சுற்றிலும் மறந்து
கணநேரமும் வீணடிக்காமல்
காரியமே கண்ணாய் ஜோடிகள் கிடக்க

அங்கே  மடியிலே கிடப்பவனுக்கோ
மடியைவிட்டு எழ மனதுமில்லை
முகங்கள் எங்கோ புதைந்திருக்க 
கைகள் மட்டுமே பேசிக்கொள்ள
தேவைகள் மட்டுமே நிறைந்த அந்த உறவு
அங்கே காதலெனும் முகமூடி அணிந்து

காதல் அங்கும் மலர்ந்துகொண்டு இருந்தது
மண்ணில் கிடந்த மீன் துண்டை
பகிர்ந்துண்ட காக்கைகளுக்கிடையே

                                              - இணையத்தமிழன்
                                                 மணிகண்டன்
« Last Edit: May 16, 2017, 12:40:49 PM by இணையத்தமிழன் »
Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….
commercial photography locations

Offline MyNa

தனியே மழையில் நனைந்தபடியே
நான் நடந்து கொண்டிருக்கையில்
என்னை தொட்ட மழைத்துளிகளெல்லாம்
என்னவனின் வரவை உணர்த்தியது

குடையுடன் அருகில் வந்த நீ
என் தனிமையை போக்கி
உன் நினைவுகளை என்னுள் நிரப்பி
எனக்கே என்னை அறிமுகம் செய்தாய்

நான் அறியும் முன்பே
என்னை கொள்ளை கொண்டாய்
அறிந்து தெளிந்து காண்கையில்
என்னுள் முழுவதுமாய் குடிகொண்டாய் 

ரகசியமாய் என் இதயத்தில்
நீ போட்டு சென்ற காதல்
பூட்டினை தினமும் நான்
ஓயாமல் தேடி அலைகின்றேன்

எங்கே அது எனக்கு முன் பிறர்
கையில் கிடைத்துவிட்டால்.. என்னை
கொள்ளை கொண்ட இதயத்தினை
பிறர் கொள்ளையிடாதிருக்க !!

உன் இதய சிறையில்
ஆயுள் கைதியாகும்
வரம் கேட்கிறேன்
தருவாயா ??


இப்படிக்கு உன் அழகிய நினைவுகளுடன்
என்றென்றும் மைனா தமிழ் பிரியை

Offline DeepaLi

காதல் நம் இரு இதயங்கள்
பேசும் மவுன  மொழி..

ஆயிரம் பூக்கள் புன்னகைப்புடன்..
அறிமுகம் ஆனது நம் முதல் சந்திப்பு..

கற்பனை செய்ய இயலாத..
வாழ்க்கை ஒன்றை..
இதயம் முழுதும் நிரப்பி இருந்தோம்..

காயப்படுத்த பலர் இருந்தும்..
மருந்தாக நம் காதல் இருந்ததால்..
நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை..
நோக்கி பயணிக்கிறது..

என் மறு பாதியே..
உன்னுடன் நான் இருக்கும் போதெல்லாம்..
நான் வாழும் உலகத்தை  மறந்து..
பெயர் தெரியா புது உலகில்..
குடி பெயர்ந்தேனடா நம் காதலுக்காக..

உயிர் இருக்கும் வரை..
நம் காதல் வாழ வேண்டும் என்பதில்லை..
நம் காதல் வாழும் வரை..
நமது உயிர் இருந்தாலே போதும்...

நம் காதலில் உனக்கும் எனக்கும்..
இருக்கும் இடைவெளியை..
கவிதைகள் இட்டு..
நிரப்பி கொண்டிருக்கிறேன்..

மணல் சுமக்கும் கடற்கரை
இந்த கன்னம் சுமக்கும் கை விரல்
நினைவுகள் சுமக்கும் நம் இதயம்
என மெல்ல நீள்கிறது நம் அழகிய காதல்..

நம் கையில் இருக்கும் குடை..
மழைக்காகவோ வெயிலுக்காகவோ இல்லை..
நம் வெட்கத்தை மறைப்பதற்காக..

காலம் சென்றாலும்..
கனவுகள் மறைந்தாலும்..
கவிதைகள் அழிந்தாலும்..
என் உயிர் பிரிந்தாலும்..
காற்றோடு தொடர்ந்து வாழ்கிறோம்..
நம் காதலுக்காக..

மரணமே வந்தாலும்..
நம் காதலை மறக்காத இதயம் வேண்டும்..
உறவாக மட்டும் அல்ல..
என்றும் என் உயிர் காதலாக..


Deepali :)
« Last Edit: May 15, 2017, 01:07:06 AM by DeepaLi »

Offline VipurThi

 • Hero Member
 • *
 • Posts: 574
 • Total likes: 742
 • Gender: Female
 • Naan tholainthaal unai serum vazhi solvaayaa... ;)
பிறக்கும் போது எனக்காய்
துடித்த என் இதயம்
இன்று உனக்கும் சேர்த்து
துடிப்பது ஏனோ

தனிமையை தேடிய நானோ
இன்று உன் துணை
நாடுவதும்  ஏனோ

இத்தனை மாற்றங்களும் என்னுளே
உன்னை கண்ட பின்பே
காரணம் ஏன் என்றால்
காதல் என்று சொல்கிறதே

நண்பன் எனும் பேர் கொண்டு
வந்தவனே என்னுள் எப்போது
என்னவன் ஆனாய்
வியக்கிறேன் நான்

உன்னுள் எனக்கான தேடல்
எதுவென தெரியவில்லையே
ஆனால் உன் அலை பாயும்
விழிகளோ ஆயிரம்
கதைகளை சொல்கிறதே

இரு இதயமும் கை கோர்த்திடவே
காத்திருப்பேனே உன்
மார்பில் சாய்ந்து
கண் மூடவே...

               
         **விபு**

« Last Edit: May 14, 2017, 10:26:43 PM by VipurThi »Offline SunRisE

 • Jr. Member
 • *
 • Posts: 66
 • Total likes: 153
 • Gender: Male
 • நம் வாழ்க்கை நம் கைகளில்
நம் காதல்
ஒரு கவிதையே

அழகிய வனம்
ஆடவரும் பெண்டிரும்
உலா வரும் நேரம்

ஏழு வண்ணங்கள் வானில்
மனத்திற்கினிய மண்வாசனை
கைகளில் எந்த காத்திருக்கும்
மழை துளிகள்

என்னவள் நீ
குடைக்குள் சாரலாய்
என் முன்னே
நனைந்தும் நனையாமல் நான்
ஒற்றைப்பார்வையில்
என் உள்ளத்தில்
மின்னல் வெட்டினால்

என்னையும் அறியாமல்
உன் பின்னே சென்றன
என் கால்கள்
கால்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்

அவிழ்த்துவிட்ட கூந்தலை
ஒரு விரலில் பிடித்து
ஒரு கண்ணில் சலனம் இல்லாமல்
மற்றொரு கண்ணில்
ஜாடை பேசினாய்

இருவரும் குடைக்குள்
இணைந்தோம்
என மனக்குடையில்
நீ வேண்டும்
இப்படியே வாழ்க்கை
முழுதும் நீ வேண்டும்
என என் மனம்
மழையை விட
கரைந்தது

கண்டதும் காதல்
என்று
வஞ்சித்து விடுவாளோ
என்று எண்ணி
நன்றி சொல்லி
விடைபெற்றேன்

அவளோ
இன்னொருமுறை சந்திப்போமா
என கேட்ட போது
என் மனம்
இப்படியே என்னுடன் வந்து
விடு என்றது

நேரம் கருதி
இன்னொரு மழை வரை காத்திருந்தாள்
உன் குடைக்குள்
நான் வருவேன் என்றேன்

சொல்லி முடிக்கும் நேரம்
மழை மீண்டும் வந்தது
அழைத்தால்
நானோ
குடையை விட்டுவிடு
என்னுள் வந்துவிடு
உன்னை அன்பெனும்
குடைக்குள்
வாழ் நாள் முழுதும்
காக்கின்றேன் வருகிறாயா
என்றேன்

குடையை விட்டுவிட்டு
என் மார்பு மீது
சாய்ந்து கொண்டால்

அன்பெனும் குடைக்குள்
இரு மனது இணைந்தோம்.

அவளுக்கு நானும் எனக்கு அவளும்
காதல் மழையில்
வானம் குடை பிடிக்க
வலம் வருகின்றோம் :-*

Offline ReeNa

அன்பெனும் இதயம்
காட்டுகிறாய்
உறவெனும் குடையால்
இணைகிறாய்
காதல் எனும் உணர்வை
ஊற்றுகிறாய்
காலமெல்லாம் என்னோடிருக்க
ஏங்குகிறாய் 

மழைத் துளியின் சத்தம்
கேட்கவில்லை
இருள் சூழும் மேகமும்
தெரியவில்லை
மழைத்துளியும் மண்ணில்
விழ முன்னே
காதல் துளிர் என்னில்
பூத்ததே கண்ணே 

அழகிய இந்த மழையில்
நடந்தோம்
இருகரம் கோர்த்து
மகிழ்ந்தோம்
தனியாக அலைந்த
என் மனசு 
அன்பென்ற மழையை
சுவாசித்ததே

நம் பிம்பங்கள்
நீரின் திரையில்
மழையோடு
கரைந்திடுமோ இல்லை   
இந்த காதல் துளிகள்
மண்ணில் விழுந்து 
பயிராய் வளர்ந்திடுமோ 

கரைந்தாலும் வளர்ந்தாலும்
அழியாத வரமாய் 
நிலைத்திடுமே உண்மை
காதல்... அன்பாய்!
« Last Edit: May 15, 2017, 02:46:16 PM by ReeNa »

Offline SweeTie

மழைத் துளிகளைச்  சிதறும் வானம்
பசும் புற்பாய்  விரிக்கிறது பூமி 
பாசத்தில்  ஒருங்கிணைந்து குடைக்குள்
சங்கமம் தேடுமிரு இதயங்கள்
 
நீண்ட இரவுகள் இன்னும் நீளாதா
என ஏங்கித் தவிக்கும் தனிமை
காதலில் மயங்கி ஊடலை நாடி
பாதையை தேடும் இதயங்கள் .

கனவுகளில் வரைந்த ஓவியங்கள்
நினைவுகளில் சிதறடித்த சிற்பங்கள்
வீணையில்  மீட்டிய  கானங்கள்
காதலில் காண விரையும் இதயங்கள் .

மது  உண்ட வண்டுகளின் மயக்கம்
விதையில் வெளிவரும் நாற்றின் தயக்கம்
வானை  தொட நினைக்கும் பருந்தின் ஏக்கம்
ஒருமிக்கும்  நாளுக்காய்  காத்திருக்கும் இதயங்கள்


கடந்த நொடிகள் மறைந்தாகவேண்டும்
எதிர்வரும் வசந்தம் இனிதாக வேணடும் 
புதிர்கள்  இன்றிய  புதுவாழ்க்கை  கான்பீர்
காதலுடன் காத்திருக்கும் இதயங்கள் வாழ்க.   …

( திருமண பந்தத்தில் இணையவிருக்கும்  என் தோழருக்கு  சமர்ப்பணம் )