தமிழ்ப் பூங்கா > காலக்கண்ணாடி

இலங்கையின் வரலாறு

<< < (3/7) > >>

Global Angel:
அரசகேசரி 1615-1617

அரசகேசரிஅரசகேசரி (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவர் ஆவார்.


வாழ்க்கை குறிப்பு

அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகனும், எதிர்மன்னசிங்கம் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591-1616) மாமனும் ஆவார். பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி பரராசசேகரச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் பெரியபிள்ளையின் மகன்தான் எதிர்மன்னசிங்கம் ஆவான். எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619.

 

இலக்கியப் பங்களிப்பு

தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் வல்லவர். காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார். காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது. இவரின் இருமொழி புலமைக்கும், மொழி பெயர்க்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டு ஒன்று காட்டுதும்:-..

 

ஸ்ராஜ்யம் குருணாதத்தம் பிரதிபத்யாதிகம் பபெள
 திநாந்தெ நிஹிதம் தேஜஸ் சவித்திரே வஹா

 

என்னும் வடமொழி இரகுவமிச சுலோகத்தை தமிழில்:-

 

கனைகழல் வீரனுங் காவ லான்றரு
 புனைமணி முடியொடும் பொலிந்து தோன்றினான்
 றினகரன் றிவாந்தகா லத்திற் சேர்த்திய
 வினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே

 

இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், நல்லூருக்குக் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள ஒரு தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் பொது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர். இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:-

 

கூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க
 ளூறு செய்திடத் தொடுத்தகூன் குயமொத்த வேனும்
 பாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த்
 தாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும்

 

இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, சங்க இலக்கியங்களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும். இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:-

 

பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்
 அரிமுக வம்பியு மருந்துறை யியக்கும்
 பெருந்துறை மருங்கில்

என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய அம்பி சிறப்புக்களை ( அம்பி = தோணி) ,

 அறிமுக மடுத்து வீழு மான்மத வளறு நாறிக்
 கரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு காப்பச்
 சுரிமுக நெற்றி துற்றிச் சுடர்மணி வர்க்கந் தொக்க
 பரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு போனார்

என்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர்.

மேலும் இவர் கம்பர் பாடிய கம்ப இராமாயணதை பின்பற்றி, காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சதை தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்.

Global Angel:
காசி நயினார் 1565-1570

காசி நயினார்


காசி நயினார் என்பவன் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆதிக்கம் தொடங்கிய 1560 களில் அந் நாட்டை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலி அரசனைத் தொடர்ந்து பட்டத்துக்கு வந்த புவிராஜ பண்டாரம் என்பவனை அகற்றிவிட்டு யாழ்ப்பாண அரசை இவன் கைப்பற்றிக் கொண்டான். இவன் யாழ்ப்பாணத்து அரச பதவிக்கு வாரிசு உரிமையற்றவன் என்பதனால், இவனை அகற்றுவதற்காக இவன் எதிராளிகள் சிலர், அக்காலத்தில் மன்னார்த் தீவைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த போத்துக்கீசரின் தளபதியான --- என்பவனிடம் முறையிட்டனர். யாழ்ப்பாண அரசியலில் தலையிடுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகக் கருதிய தளபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து காசி நயினாரை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்கித் திரும்பினான். காசி நயினார் சிறையில் அடைக்கப்பட்டான். போத்துக்கீசத் தளபதி மன்னாருக்குத் திரும்பியதும், காசி நயினாரின் ஆதரவாளர்கள் புதிய அரசனைக் கொன்று, காசி நயினாரைச் சிறைமீட்டதுடன் அவனை மீண்டும் பதவியில் அமர்த்தினர்.

இந் நிகழ்வைக் கேள்வியுற்ற போத்துக்கீசத் தளபதி சினம் கொண்டான். காசி நயினாரைச் சூழ்ச்சியால் கொல்ல எண்ணி, அவன் அரண்மனைப் பணியாள் ஒருவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அரசன் உண்ணும் உணவில் நஞ்சு கலந்து அவனைக் கொன்றான்.

Global Angel:
பெரிய பிள்ளை 1570-1572

பெரியபிள்ளைபெரிய பிள்ளை, செகராசசேகரன் என அரியணைப் பெயர் கொண்டவர்களில் எட்டாவது ஆரியச் சக்கரவர்த்தியுமாகிய, யாழ்ப்பாண அரசன் ஆவான். இவனைக் குறித்து மிகக் குறைவான தகவல்களே ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன. காசி நயினாரைக் சூழ்ச்சியால் கொன்றபின், மன்னாரில் இருந்த போர்த்துக்கீசத் தளபதியால் இவன் மன்னன் ஆக்கப்பட்டவன். ஜார்ஜ் தெமேலோ என்னும் அத் தளபதி 1570 ஆம் ஆண்டு வரையிலேயே பதவியில் இருந்தவன் என்பதால், பெரிய பிள்ளையின் ஆட்சி 1570 ஆம் ஆண்டுக்கு முன்னரே தொடங்கிவிட்டது என்பது உறுதி. 1582 ஆம் ஆண்டில் அரசுக்கு உரிமையற்றவனான புவிராஜ பண்டாரம் என்பான் யாழ்ப்பாணத்தை ஆண்டது பற்றிய குறிப்புக்கள் வேறு மூலங்களில் காணப்படுவதால், பெரிய பிள்ளையின் ஆட்சி 1572 ஆம் ஆண்டுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் தெரிகிறது.

 

இவை தவிர தற்காலத்தில் கிடைக்கும் போத்துக்கீசர் காலத் தகவல்களின்படி புவிராஜ பண்டாரத்தைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த எதிர்மன்ன சிங்கன் பெரிய பிள்ளையின் மகன் ஆவான் என்பதும் தெரியவந்துள்ளது

Global Angel:
குணவீர சிங்கையாரியன் 1417-1440

குணவீர சிங்கையாரியன்


குணவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன். இவன் தந்தையான செயவீர சிங்கையாரியனைத் தொடர்ந்து குணவீரன் பட்டத்துக்கு வந்தான். இவன் பட்டத்துக்கு வந்த ஆண்டு 1414 அல்லது 1417 ஆகும். குணவீரனது மகனே கனகசூரிய சிங்கையாரியன் ஆவான்.Global Angel:
குலசேகர சிங்கையாரியன் 1246-1256

குலசேகர சிங்கையாரியன்
குலசேகர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் முதல்வனான கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் மகனாகிய இவன் கி.பி 1246 தொடக்கம் 1256 ஆம் ஆண்டுவரை பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான்.

 

இவன் ஆட்சி முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும், நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன் வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்ததாகவும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. குலசேகர சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகனான குலோத்துங்க சிங்கையாரியன் அரசனானான்.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version