தமிழ்ப் பூங்கா > காலக்கண்ணாடி

இலங்கையின் வரலாறு

<< < (2/7) > >>

Global Angel:
யாழ்ப்பாண இராசதானி வம்சம்

கூழங்கைச் சக்கரவர்த்தி


யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான். வையாபாடல் இப் பெயரின் வடமொழியாக்கமான கோளுறு கரத்துக் குரிசில் என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால், "கூழங்கையன்" என அழைக்கப்பட்டுப் பின்னர் "கூழங்கைச் சக்கரவர்த்தி" அல்லது "கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி" எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

 

"மணற்றிடர்" என்று அன்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து, தசரதன் மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என வையாபாடல் கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும், யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் கலியுக ஆண்டு 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.

 

தமிழ்ப் படைகளின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து அப்போதைய தலைநகரமான பொலநறுவையைத் துவம்சம் செய்த கலிங்க மாகன் எனும் கலிங்கத்து இளவரசனே காலிங்கச் சக்கரவர்த்தி என்னும் பெயருடன் தனியரசு நடத்தினான் என்றும் இப்பெயரே திரிபடைந்து கூழங்கைச் சக்கரவர்த்தியானதென்பதும், சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் போன்றோருடைய கருத்து. தற்போது இதற்குப் போதிய ஆதரவு இல்லை.

கூழங்கைச் சக்கரவர்த்தியின் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பதே தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் காலக் கணக்கு ஆகும்.

 

இவ்வரசனே நல்லூர் நகரைக் கட்டியவன் என வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இன்னொரு இடத்திலிருந்தே ஆண்டான் என்றும், 15 ஆம் நூற்றாண்டிலேயே நல்லூர் கட்டப்பட்டது என்பதும் சிலருடைய கருத்து. எனினும் நல்லூர் மட்டுமே ஆரியச்சக்கரவர்த்திகளுடைய தலைநகராக அமைந்திருந்ததென்பதே இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும்

Global Angel:
செண்பகப் பெருமாள் 1450-1467

செண்பகப் பெருமாள்


(சிங்களம்: சப்புமல் குமாரயா), ஆறாம் புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசை ஆண்டவன்.

 

பிறப்பு
ஆறாம் பராக்கிரமபாகு இலங்கையின் கோட்டே இராச்சியத்தை ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரனொருவன் மலையாள நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தான். இவனைத் தன் கீழ் சேவைக்கு அமர்த்திக்கொண்ட பராக்கிரமபாகு, இவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனே சப்புமால் குமாரயா என்ற சிங்களப் பெயரால் வழங்கப்பட்ட செண்பகப் பெருமாள் ஆவான். இவனே பிற்காலத்தில் சிறி சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

 

இளவயது

ஆறாம் பரக்கிரமபாகுவுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாதிருந்ததால் செண்பகப் பெருமாளும், அவனது தம்பியும் அரசனுடைய வளர்ப்புப் பிள்ளைகளாகவே வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களும் அரச குலத்தாருக்குரிய பலவிதமான கலைகளையும் கற்றுத் தேறியிருந்தனர். எனினும் பிற்காலத்தில் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஆண் பிள்ளையொன்று பிறந்தபோது, அப்பிள்ளையின் அரசுரிமைக்கு செண்பகப் பெருமாள் தடையாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்டதால் அவனை கோட்டே அரசிலிருந்து வெளியேற்ற அரசன் முடிவு செய்ததாக வரலாற்றாய்வாளர் சிலர் நம்புகிறார்கள்.

 

சப்புமால் குமாரயாவின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள்

செண்பகப் பெருமாள் வெளியேற்றும் பணியைத் தந்திரமாக முடிக்க எண்ணி, யாழ்ப்பாண அரசின் கீழ் அமைந்திருந்த வன்னிச் சிற்றரசர்கள் மீது படையெடுக்குமாறு செண்பகப் பெருமாள்லை அரசன் பணித்ததாகக் கூறப்படுகின்றது. வீரனான செண்பகப் பெருமாள் வன்னியை வென்று மீண்டான். தொடர்ந்து யாழ்ப்பாண அரசனையும் வெல்லுமாறு அவன் பணிக்கப்பட, யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் சென்ற அவன், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண்டிருந்த கனகசூரிய சிங்கையாரியனை வென்று கோட்டே திரும்பினான். பராக்கிரமபாகு, யாழ்ப்பாணத்தை ஆளும்படி சப்புமால் குமாரயாவை அனுப்பிவைத்தான்.

 

யாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள்

1450 ஆம் ஆண்டில் செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை ஆளத் தொடங்கினான். நல்லூரில் தலைநகரைக் கட்டியவன் இவனே என்று சிலர் கருதுகிறார்கள். சைவ சமயத்தைச் சேர்ந்தவனான இவனே, நல்லூர்க் கந்தன் ஆலயத்தை அமைத்தவன் என்றும் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இவனது ஆட்சி 17 ஆண்டு காலம் நீடித்தது.

 

கோட்டேயைக் கைப்பற்றல்

1467ல், தனது பேரனான ஜெயவீரன் என்பவனுக்குக் கோட்டே அரசைக் கொடுத்துவிட்டுப் ஆறாம் பராக்கிரமபாகு காலமானான். இதனையறிந்த செண்பகப் பெருமாள் கோட்டேக்குச் சென்று ஜெயவீரனைத் தோற்கடித்து சிறி சங்கபோதி புவனேகபாகு என்னும் அரியணைப் பெயருடன் கோட்டே அரசனானான்.

கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.

 

செண்பகப் பெருமாளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.

Global Angel:
கனகசூரிய சிங்கையாரியன் 1467-1478

கனகசூரிய சிங்கையாரியன்




கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.

 

சப்புமால் குமாரயாவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.

Global Angel:
சங்கிலியன் 1519-1560

சங்கிலியன்


சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன் என்பதால் சங்கிலியனைப் பற்றி அவர்கள் நல்ல கருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதற்கு இல்லை. இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.


குடும்பம்

இவன் 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனின் மகனாவான். இவனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தபோதும், அரசை முறையற்ற விதத்தில் இவன் கைப்பற்றிக் கொண்டான்.

 

சங்கிலியனும் போத்துக்கேயரும்

சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள்.யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து சங்கிலியனைத் தண்டிக்க வேண்டுமென்று இவர்கள் கோவாவில் இருந்த போத்துக்கீசரின் தலைமையையும், போத்துக்கல் அரசனையும் பலவழிகளிலும் வற்புறுத்தி வந்தனர்.1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான்.

 

மன்னார் படுகொலைகள்

சங்கிலி கத்தலிக்க சமயத்துக்கு மாறி, போத்திக்கீசரால் மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட 600-700 வரையான பறையர் சமூகத்தைச் சேர்த தமிழர்களை படுகொலை செய்தாக கூறப்படுகிறது.

 

நல்லூர் வீழ்ச்சி

சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

 

சங்கிலியனின் தந்திரம்

இந் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்கிலியன் போர்த்துக்கேயப் பதிலாளுநனுக்குச் சமாதானத் தூது அனுப்பினான். சிக்கலான நிலைமையில் இருந்த ஆளுநன் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டான். போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட இந் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக, இளவரசன் ஒருவனையும், வேறொரு அதிகாரியையும் போத்துக்கேயர் பிணையாக வைத்திருப்பதற்கும் அரசன் இணங்கினான். சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். போத்துக்கேயர் அரசன் தருவதாக உடன்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். அதனைக் கொடாமல் போக்குக்காட்டிய சங்கிலி போத்துக்கேயரைத் தந்திரமாகத் துரத்திவிடுவதிலேயே கண்ணாக இருந்தான். ஒருநாள் ஒரே சமயத்தில் அங்கேயிருந்த போத்துக்கேயருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தனர். வெளியே சென்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கியிருந்த இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. போத்துக்கேயர் பெரும் சிரமத்தோடு தப்பியோடினர். எனினும், பிணையாகக் கொடுத்திருந்த இளவரசனையும், அதிகாரியையும் மீட்கும் சங்கிலியின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர்களைப் போத்துகேயர் கோவாவுக்குக் கொண்டு சென்றனர்.

 

சங்கிலியின் முடிவு

சங்கிலி மேலும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். தென்னிலங்கை அரசுகளில் ஒன்றான சீதாவாக்கை அரசனான மாயாதுன்னைக்கு 1564 ஆம் ஆண்டில் சங்கிலி படை உதவி செய்ததாகத் தெரிகிறது. சங்கிலியனின் ஆட்சி எவ்வாறு முடிவுற்றது என்பதில் தெளிவில்லை. இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார்.

Global Angel:
புவிராஜ பண்டாரம் 1561-1565

புவிராஜ பண்டாரம்


புவிராஜ பண்டாரம் 1580 களின் தொடக்கத்திலிருந்து 1591 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனாவான். பெரிய பிள்ளை என்னும் அரசனுக்குப் பின் அரசு கட்டிலேறிய இவன், அக் காலத்தில் யாழ்ப்பாண அரசில் செல்வாக்குச் செலுத்திய போத்துக்கீசரினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

 

கண்டி இளவரசிக்கு அடைக்கலம்

கண்டி அரச மரபினரின் வரலாற்றோடு தொடர்புள்ள சில நிகழ்வுகள் மூலமே புவிராஜ பண்டாரம் முதன் முதலாக அறியப்படுகிறான். 1582 ஆம் ஆண்டையொட்டிய காலப்பகுதியில் சீதாவாக்கை அரசன், கண்டி மீது படையெடுக்கவே, கண்டி அரசன் குடும்பத்தோடு திருகோணமலைக்கு ஓடுகிறான். அங்கே அரசனும் அரசியும் இறக்க, அவர்களுடைய சிறுவயது மகளும், மருமகனான இளவரசன் யமசிங்கனும் யாழ்ப்பாணத்துக்கு வந்து புவிராஜ பண்டாரத்திடம் அடைக்கலம் புகுகின்றனர். இந்தச் சிறுமியே பிற்காலத்தில் கண்டியரசனான விமலதர்மசூரியனை மணந்து கண்டி அரசியான டோனா கத்தறீனா என்பவளாகும்.

 

மன்னாரில் போத்துக்கீசரோடு போர்

போத்துக்கீசர் கைப்பற்றி வைத்திருந்த யாழ்ப்பாணத்துக்குச் சொந்தமான மன்னார்த் தீவில் இருந்து அவர்களைத் துரத்தி அவ்விடத்தை விடுவிப்பதில் புவிராஜ பண்டாரம் தீவிரமாக இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டுவாக்கில் பெரும் படையுடனும், ஆயுத தளவாடங்களுடனும் மன்னாரைத் தாக்கினான். இருந்தும், அக்காலத்து நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் யாழ்ப்பாணத்துப் படைகளுக்குப் போதிய பயிற்சி இல்லாததாலோ என்னவோ இம் முயற்சியில் புவிராஜ பண்டாரத்துக்கு வெற்றி கிட்டவில்லை. 1591 ஆம் ஆண்டில் மீண்டும் தென்னிந்தியக் கப்பல் தலைவனான கொட்டி மூசா மரிக்கார் என்பவனோடு சேர்ந்து கொண்டு மன்னாரைத் தாக்க முயற்சித்தும் மீண்டும் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது.

 

போத்துக்கீசரின் யாழ்ப்பாணப் படையெடுப்பு

புவிராஜ பண்டாரத்தைத் தண்டிக்க எண்ணிய போத்துக்கீசர் 1591 ஆம் ஆண்டில் அந்தரே பூர்த்தாடு என்பவன் தலைமையில் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தனர். நிகழ்ந்த போரில் நல்லூருட் புகுந்த போத்துக்கீசர் படை அரசனைப் பிடித்தனர். அரசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட அவன் தலை கொய்யப்பட்டு இறந்தான்

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version